Home இலங்கை சமூகம் சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பில் விசாரணை

சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பில் விசாரணை

0

சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படும் 25 வாகனங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பான சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரிபார்க்கப்பட்ட தகவல்

இந்தநிலையில் விசாரணைகளின் போது பெறப்பட்ட சரிபார்க்கப்பட்ட தகவல்களின்
அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக பதிவு செய்தல் மற்றும் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வாகனங்களை
ஒன்று சேர்த்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்களுக்கு எதிராக சட்ட
நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதுபோன்ற வாகனங்களை வைத்திருப்பதில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான நபர்கள்
அரசியலுடன் தொடர்புடையவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version