Home சினிமா அப்படி ஆனதால் 7 முறை தற்கொலை முயற்சி செய்துள்ளேன்.. 90களின் நாயகி மோகினி எமோஷ்னல் பேட்டி

அப்படி ஆனதால் 7 முறை தற்கொலை முயற்சி செய்துள்ளேன்.. 90களின் நாயகி மோகினி எமோஷ்னல் பேட்டி

0

மோகினி

கோதண்ட ராமைய்யா இயக்கத்தில் ஈரமான ரோஜாவே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை மோகினி.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிப் படங்களில் அதிகம் நடித்தார்.

பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே 1999ம் ஆண்டு பரத் என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார், இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

நடிகை பேட்டி

நடிகை மோகினி சமீபத்தில் ஒரு பேட்டியில், எனக்கு திருமணமான பிறகு குழந்தை, கணவர் என மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் நான் ஏதோ ஒரு விதமான மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்படுவதை தெரிந்துகொண்டேன்.

அந்த காரணத்தால் மகாநதி சீரியலில் இருந்து விலக முடிவு எடுத்த பிரபலம்… யாரு, என்ன ஆச்சு?

எனது வாழ்க்கையில் தவறாக எதுவும் நடக்கவில்லை, ஆனால் நான் மன அழுத்தத்திற்கு ஆளானேன். ஒரு கட்டத்தில் தற்கொலைக்கும் முயற்சி செய்தேன், ஒருமுறை அல்ல 7 முறை நான் தற்கொலைக்கு முயற்சி செய்தேன்.

அப்போது, நான் ஒரு ஜோசியரை சந்தித்தேன், அவர் எனக்கு சூனியம் வைத்து இருப்பதாக சொன்னார்.

அதை கேட்டு முதலில் எனக்கு சிரிப்புதான் வந்தது.
பின் தற்கொலைக்கு முயற்சி வரை செல்ல வேண்டிய காரணம் என்ன என்று யோசித்தேன்.

அதன் பிறகு தான், அதிலிருந்து வெளிப்படுவதற்கான முயற்சிகளை எடுத்தேன் அதற்கு எனக்கு உறுதுணையாக இருந்தது என்னுடைய ஜீசஸ் என கூறியுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version