Home இலங்கை அரசியல் கஜ்ஜாவின் மகனை விசாரணைக்கு அழைக்கப்போகும் CID!

கஜ்ஜாவின் மகனை விசாரணைக்கு அழைக்கப்போகும் CID!

0

ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலையுடன் பிரதான சூத்திரதாரியாக “மீகஸ்ஆரே கஜ்ஜா” அடையாளம் காணப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு படையில் முக்கிய ஒருவராக இருந்த கஜ்ஜா என்பவர் அண்மையில் மித்தெனிய பிரதேசத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவருடைய கொலையின் பின்னர் ராஜபக்ச தரப்புக்கு எதிராக பல விடயங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, வசீம் தாஜூதீன் கொலைக்கும், ராஜபக்ச குடும்பத்துக்கும் மிக நெருங்கிய தொடர்புகள் இருப்பதற்கான ஆதாரங்கள் தற்போது வெளியாகி வருகின்றன.

வசீம் தாஜூதீன் கொலை செய்யப்பட்ட அன்றைய தினம் அவருடைய வாகனத்தை பின்தொடர்ந்த டிபெஃன்டர் ரக வாகனம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவுக்கு சொந்தமானது என தகவல் வெளியாகியுள்ளது.

ஆக, கொலை செய்யப்பட்ட “கஜ்ஜா”வுக்கும், மகிந்த தரப்புக்கும் மிக நெருங்கிய தொடர்புகள் காணப்படும் நிலையில், வசீம் தாஜூதீன் கொலையுடன் தொடர்புபட்ட முக்கிய குற்றவாளிகள் வெகு விரைவில் வெளிப்படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், “கஜ்ஜா” என்பவரின் மகனும் இவ்விடயத்திற்கான முக்கிய சாட்சியமாக உள்ளார்.

இவ்விடயங்கள் தொடர்பில் மேலும் ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் இன்றைய அதிர்வு……….

https://www.youtube.com/embed/_bKjofvtr-s

NO COMMENTS

Exit mobile version