Home இலங்கை அரசியல் ரணில் தொடர்பான விசாரணையில் CIDயின் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம்

ரணில் தொடர்பான விசாரணையில் CIDயின் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம்

0

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று காலை 9.00 மணிக்கு குற்றப் புலனாய்வுத் துறை முன் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

எனினும் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை என குற்றப் புலனாய்வு திணைக்களம் அவருக்கு அறிவித்துள்ளதென முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணம் குறித்து விசாரணை மேற்கொள்ளும் நோக்கில் முன்னாள் செயலாளர் அழைக்கப்பட்டிருந்தார்.

குற்றப் புலனாய்வு திணைக்களம்

குற்றப் புலனாய்வு திணைக்களம் இதற்கு முன்னரும் சமன் ஏக்கநாயக்கவிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தது..

இந்நிலையில் தொடர்ந்தும் விசாரணை செய்யும் முடிவில் மாற்றம் செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version