‘க்ளீன் ஶ்ரீலங்கா’ சிறந்த செயற்திட்டமாக இருந்தபோதும், தவறான இடத்தில் அது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சிங்கள வார இதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
‘க்ளீன் ஶ்ரீலங்கா’ செயற்திட்டம் இந்நாட்டுக்கு அத்தியாவசியமான ஒரு திட்டமாகும்.
ஆனால் அதனை மேல் மட்டத்தில் இருந்தே ஆரம்பித்திருக்க வேண்டும்.
தவறான இடத்தில் ஆரம்பம்
ஏராளமான தொழிற்சாலைகள் நச்சுப் புகைகளை வெளியிட்டும், நச்சுக் கழிவுகளை வெளியிட்டும் சுற்றுச் சூழலுக்குப் பாரிய தீங்கை ஏற்படுத்துகின்றன.
அவற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் முதலில் சுற்றுச் சூழலை தூய்மைப்படுத்தும் வகையில் ‘க்ளீன் ஶ்ரீலங்கா’ செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும். எனினும் இந்த அரசாங்கம் அதனை தவறான இடத்தில் இருந்தே ஆரம்பித்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.