Home முக்கியச் செய்திகள் பெக்கோ சமனின் மற்றொரு நெருங்கிய கூட்டாளி கைது!

பெக்கோ சமனின் மற்றொரு நெருங்கிய கூட்டாளி கைது!

0

தடுப்பு காவலில் உள்ள பாதாள உலக குற்றவாளியான பெக்கோ சமனின் மற்றொரு நெருங்கிய கூட்டாளி இன்று (14) கைது செய்யப்பட்டார்.

சூரியவெவ பகுதியில் வைத்து 39 வயதான சந்தேகநபர் ஒருவரையே தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மேலும், சந்தேகநபர் வசம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, 40 உயிருள்ள தோட்டாக்கள் மற்றும் 250 கிராம் ஹெராயின் ஆகியவற்றையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை

இந்த நிலையில், குறித்த நபர் சூரியவெவ காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளார்.

மேலும், நேற்று (13) எம்பிலிப்பிட்டியவில் பெக்கோ சமனின் மற்றொரு நெருங்கிய கூட்டாளி துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version