Home இலங்கை குற்றம் இலங்கை சிக்காகோவாக மாற்றமடைந்துள்ளது: அத்துருகிரிய தாக்குதலுக்கு நீதவான் கண்டனம்

இலங்கை சிக்காகோவாக மாற்றமடைந்துள்ளது: அத்துருகிரிய தாக்குதலுக்கு நீதவான் கண்டனம்

0

சிக்காககோவில் போன்று இலங்கையில் குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாக கடுவெல பதில் நீதவான் பீ.ஜீ.பி. கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

அத்துருகிரிய பிரதேசத்தில், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்ற இடத்தை நேரில் பார்வையிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“இது ஓர் ஆபத்தான நிலைமை. பொதுமக்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை என்பதே இந்த சம்பவத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.

உடனடி விசாரணை 

சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கும் பொலிஸ் நிலையத்திற்கும் இடையில் ஒரு கிலோ மீற்றர் தூரமே காணப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வந்தார்கள் சுட்டார்கள் சென்றார்கள் என்ற நிலைமை காணப்படுகின்றது.” என்றார்.

சிக்காகோ அதிகளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே பதில் நீதவான் இலங்கையை சிக்காகோவாக ஒப்பீடு செய்து கருத்து வெளியிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version