நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பாதாள உலக கும்பலைச்
சேர்ந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட 20 விசேட
குழுக்களால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது பாதாள உலக கும்பலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மேலும்
22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ்
குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பில் ஹோகந்தர பகுதியைச் சேர்ந்த 34
வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு..