Home இலங்கை சமூகம் கரையோர தொடருந்து சேவை குறித்து வெளியான அறிவிப்பு

கரையோர தொடருந்து சேவை குறித்து வெளியான அறிவிப்பு

0

நாட்டில் கரையோர தொடருந்து பாதையின் தண்டவாளத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் தொடருந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இதனை தொடருந்து திணைக்கள (Department of Railway) பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே குறிப்பிட்டார். 

பம்பலப்பிட்டி (Bambalapitiya) மற்றும் வெள்ளவத்தை (Wellawatte) தொடருந்து நிலையங்களுக்கு இடையிலான பாதையில் தண்டவாளம் உடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தப் பணிகள் 

இதனால் கரையோர வழித்தடத்தில் ஒரு தண்டவாளத்தில் மட்டுமே தொடருந்துகள் இயக்கப்படுவதால் தொடருந்துகள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மேலும், குறித்த வீதியின் திருத்தப் பணிகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்கள பிரதி பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார். 

 

Source: https://ibctamil.com/article/coastal-line-trains-delayed-in-sri-lanka-1719892454

NO COMMENTS

Exit mobile version