Home இலங்கை சமூகம் சாதாரண தர பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீடு ஆரம்பிக்கப்படமாட்டாது! வெளியான காரணம்

சாதாரண தர பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீடு ஆரம்பிக்கப்படமாட்டாது! வெளியான காரணம்

0

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படமாட்டாது என பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மதிப்பீட்டு நடவடிக்கைகள்

இன்று(27.06.2024) ஆரம்பிக்கவிருந்த குறித்த பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள்
தவிர்க்க முடியாத காரணத்தினால் ஆரம்பிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சாதாரண தர பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் நாளை (28) ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சாதாரண பரீட்சை

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சை கடந்த மாதம் 06 ஆம் திகதி ஆரம்பமானது.

இதன்போது கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சையில் 452,979 பரீட்சார்த்திகள் தோற்றியதுடன் நாடளாவிய ரீதியில் 3,527 நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெற்றன.

NO COMMENTS

Exit mobile version