Home இலங்கை அரசியல் தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள பணிப்புரை

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள பணிப்புரை

0

ஜனாதிபதி தேர்தல் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு பணிப்புரை ஒன்றை விடுத்துள்ளது.

அதன்படி ஜனாதிபதி தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடிய அரச அதிகாரிகள் மற்றும் அரச வாகனங்கள் தொடர்பில் கணக்கெடுப்பை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L.ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடிய அரச உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை மற்றும் அதில் பங்குபற்றக்கூடிய அதிகாரிகளின் எண்ணிக்கை தொடர்பில் உரிய ஆவணங்கள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Source: https://tamilwin.com/article/instructions-to-election-officers-1719454703

NO COMMENTS

Exit mobile version