Home இலங்கை சமூகம் தமிழர் பகுதியில் அழிவடையும் நிலையிலுள்ள பயிர்கள்! வெளியான காரணம்

தமிழர் பகுதியில் அழிவடையும் நிலையிலுள்ள பயிர்கள்! வெளியான காரணம்

0

நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக, தென்னை, வாழை, கமுகு உள்ளிட்ட பல பயிர்கள் அழிவடைந்து வரும் நிலை காணப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த வறட்சி நிலை காரணமாக, கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாரதிபுரம் பகுதி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கண்டாவளை உள்ளிட்ட பல பகுதிகளில் தென்னை செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் கவலை

தற்பொழுது நாட்டில் தேங்காய்க்கு பெரும் கேள்வி நிலவி வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தென்னை செய்கை மேற்கொள்ளப்பட்டு எட்டு முதல் 9 வருடங்கள் கடந்த நிலையில் பயன்தரக் கூடிய நிலையில் இருந்த பலரது தென்னைகள் அழிவடைந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

  

மேலும் இந்த வறட்சியால், வாழைச் செய்கையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் கமுகு போன்றவையும் அழிவடையும் நிலையில் காணப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version