ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெயின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த தகவலை, தேசிய நுகர்வோர் முன்னணியின் (NCF) தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
சுங்க வரி
இதன்படி, ஒரு லீற்றர் தேங்காய் எண்ணையின் விலை 180 ரூபா தொடக்கம், 200 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக 450 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் போத்தல் ஒன்றின் விலை தற்போது 550 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் சுங்க வரி அதிகரிப்பே விலை அதிகரிப்புக்கு காரணம் என தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.