நாட்டில் தேங்காய் விலை சடுதியாக அதிகரித்துள்ளதால் அன்றாட உணவுக்கான செலவீனங்கள் அதிகரித்துள்ளதாக கொழும்பு வாழ் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை காப்பாற்ற தவறி வருவதாகவும் பொது மக்கள் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.
அத்துடன், அரசாங்கம் இதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறான காலப்பகுதியில் தேங்காய் ஏற்றுமதியை மட்டுப்படுத்தி நாட்டு மக்களுக்கு அவற்றை விநியோகிக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவை தொடர்பாக மக்களின் கருத்துக்களை செவிமடுக்கின்றது எமது மக்கள் குரல் நிகழ்ச்சி,