Home இலங்கை சமூகம் அதிரடியாக மாற்றம் காணவுள்ள தேங்காய் விலை : வெளியான தகவல்

அதிரடியாக மாற்றம் காணவுள்ள தேங்காய் விலை : வெளியான தகவல்

0

நாட்டில் தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபாவாக அதிகரிக்கும் அபாயமுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நாட்களில் தேங்காய் ஒன்று சந்தையில் 130 முதல் 160 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.

நாட்டின் வருடாந்த தேங்காய் உற்பத்தி தோராயமாக மூன்று பில்லியன் என தரவுகள் தெரிவிக்கின்றன.

தேங்காய் எண்ணெய்

இந்தநிலையில், நாட்டில் உற்பத்தியாகும் தேங்காயில், கணிசமான அளவு தேங்காய் எண்ணெய் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்ற நிலையில் ஒரு கிலோ தேங்காய் எண்ணெய் தயாரிக்க பத்து தேங்காய் தேவைப்படுகின்றது.

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக தேங்காய் உற்பத்தி உயர் மட்டத்தில் காணப்பட்ட போதிலும், தேங்காய்க்கு தட்டுப்பாட்டினை ஏற்படுத்தி தேங்காய் விலையை செயற்கையாக அதிகரிக்கச் செய்யும் மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த அரசாங்கத்தின் போது, ​​இந்தோனேசியா (Indonesia), பிலிப்பைன்ஸ் (Philippines) மற்றும் மலேசியா (Malaysia) போன்ற நாடுகளில் இருந்து தேங்காய்களை இறக்குமதி செய்வது தொடர்பாக தொழில் அமைச்சில் பல சுற்று கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

வெளியில் இருந்து தேங்காய்களை இறக்குமதி செய்து தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்தால் நாட்டிலுள்ள தேங்காய் உற்பத்தியை பயன்படுத்தி தேங்காய் எண்ணெய் தயாரிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டது.   

தேங்காய் இறக்குமதி

அத்தோடு, தேங்காயின் கையிருப்பு குறைவினால் தேங்காய் விலை உயர்வடைந்துள்ளதாக அகில இலங்கை ஒருங்கிணைந்த விசேட பொருளாதார நிலையங்கள் மற்றும் மெனிங் வர்த்தக சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எச்.எம்.எம். உபசேனா அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்தோடு, எதிர்காலத்தில் போதியளவு தேங்காய் கையிருப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதனால் எதிர்காலத்தில் தேங்காய் விலை குறையலாம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தேங்காய் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காக அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான தோட்டங்களில் உள்ள தேங்காய்களை நகரப் பகுதிகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத்தும் (Vijitha Herat) அண்மையில் தெரிவித்தார்.

இருப்பினும் குறித்த திட்டம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version