Home இலங்கை சமூகம் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அமைச்சின் முக்கிய அறிவிப்பு

பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அமைச்சின் முக்கிய அறிவிப்பு

0

கர்ப்பப்பை புற்றுநோயைத் தடுப்பதற்காக வழங்கப்படும் HPV தடுப்பூசிக்குப் பின் ஏற்படும் சிறு பக்க விளைவுகள் குறித்து பாடசாலை மாணவிகள்  தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு (Ministry Of Health Sri Lanka) தெரிவித்துள்ளது.

களுத்துறையில் (Kalutara) உள்ள ஆரம்பப் பாடசாலையொன்றின் 05 மாணவிகளுக்குக் குறித்த தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் வயிற்று வலி, தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் குறித்த மாணவர்களுக்கு உடனடி மருத்துவச் சிகிச்சை வழங்கியதன் பின்னர், அவர்கள் குணமடைந்ததாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மருத்துவச் சிகிச்சை

இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சுகாதார அமைச்சு, தடுப்பூசிக்குப் பின் ஏற்படும் சிறு பக்க விளைவுகள் அவை குறுகிய கால அறிகுறிகள் என குறிப்பிட்டுள்ளது.

தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளும் போது ஏற்படும் அச்சம் காரணமாகச் சிறுவர்களுக்கு சிறு மயக்க நிலை போன்ற குறுகியகால பக்க விளைவுகள் ஏற்படுவதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் பெண்களிடையே காணப்படும் புற்று நோய்களில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயும் ஒன்றாக காணப்படுவதுடன், அதை தடுப்பதற்கான மிக முக்கியமான மற்றும் வெற்றிகரமான வழி HPV தடுப்பூசி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தடுப்பூசியானது பாதுகாப்பானது மற்றும் உலக சுகாதார நிறுவனத்தால் சான்றளிக்கப்பட்டுள்ளது எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

NO COMMENTS

Exit mobile version