Home இலங்கை சமூகம் நாட்டை வந்தடைந்த தேங்காய் பால் கப்பல்

நாட்டை வந்தடைந்த தேங்காய் பால் கப்பல்

0

தேங்காய் சார்ந்த தொழில்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட அரசாங்கத்தின் மூலப்பொருள் இறக்குமதி முயற்சியின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் பால் கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.

உறைந்த தேங்காய் பால், தேங்காய் பால் பவுடர் மற்றும் துண்டுகளாக்கப்பட்ட தேங்காய் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த தொகுதி  200 மில்லியன் தேங்காய்களுக்கு சமம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேங்காய் பால்

இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்கள் சுங்க அனுமதி மற்றும் ஆய்வக சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

பெருந்தோட்ட மற்றும் தொழில்துறை அமைச்சகங்களின் கூட்டு முன்மொழிவின் அடிப்படையில் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட இந்த திட்டம், தேங்காய் பால் பவுடர் தொழிலில் மூலப்பொருள் பற்றாக்குறையைக் குறைக்கவும், உள்நாட்டு தேங்காய் விலைகளைக் குறைக்கவும், உள்ளூர் உற்பத்தியாளர்களை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version