கடன் சுமையால் பாதிக்கப்பட்ட தனது நாட்டிற்கு கொண்டு வரவிருக்கும் மாற்றத்தைப் பற்றி மேடைக்கு மேடை பேசி அளித்த வாக்குறுதிகள் மூலம் அநுரகுமார திசாநாயக்க இலங்கை மக்களின் நம்பிக்கைக்குறிய தலைவராக 2024.09.21 அன்று தெரிவுசெய்யப்பட்டார்.
எதிர்தரப்பு அரசியல்வாதிகளின் ஊழல், மற்றும் தனது எதிர்கால அரசியலின் பொருளாதார முன்னேற்றம் அடங்கிய கருத்துக்களை அவர் ஏறிய தேர்தல் பிரசார மேடைகளில் கேட்டிருக்கக்கூடும்.
அந்த வகையில் அவர் தனது அரசியல் ஆதவரை இலங்கை மக்கள் மத்தியில் மாத்திரம் இல்லாது புலம்பெயர் நாடுகளிலும் ஏற்படுத்தும் முயற்சியை மேற்கொண்டிருந்தார்.
இந்த செயற்பாடு புலம்பெயர் நாடுகளில் அநுரவுக்கு என குழுக்களையும், சங்கங்களையும் உறுவாக்கியுள்ளது.
இந்நிலையில் இதனை விரிவாக ஆராயும் பொருட்டு லங்காசிறி ஊடகம், கனடாவில் உள்ள அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னத்தை ஊடறுப்பு நிகழ்ச்சியின் மூலம் தொடர்புகொண்டது.
இதன்போது பல கருத்துக்களை வெளிப்படுத்திய அவர், கனடாவில் அநுரவுக்கு ஆதரவான தரப்பினர் அரசியல் ரீதியாகவும் ஒரு நகர்வை மேற்கொண்டுள்ளதாக தெரிவிதார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
