சிறுவர்களுக்கு சளி மற்றும் இருமல் பாதிப்புகள் அதிகரித்து வருவதுடன், இன்புளுவன்சா நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
பரவக் கூடிய அபாயம்
காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு அறிகுறி உள்ளவர்கள் மாஸ்க் அணிய வேண்டும் எனவும் அறிகுறி உள்ள குழந்தைகளை முன்பள்ளி, பாடசாலை, பகல்நேர பராமரிப்பு நிலையத்திற்கு அனுப்புவதை தவிர்க்குமாறு வைத்தியர் தீபால் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இது மற்றவருக்கு எளிதில் பரவக் கூடியதும் என்றும் வைத்தியர் கூறியுள்ளார்.