ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickramasinghe) ஆலோசனைக்கமைய ‘ஜனாதிபதி
புலமைப்பரிசில்’ வழங்கும் வேலைத்திட்டத்தின் மற்றுமொரு நிகழ்வு நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு, நுவரெலியா
மாநகர மண்டபத்தில் இன்று (16.07.2024) செவ்வாய்க்கிழமை நடைபெற்றுள்ளது.
மத்திய மாகாண ஆளுனர் சட்டத்தரணி லலீத்யூ கமகே தலைமையில் நுவரெலியா மாவட்ட
செயலாளர் நந்தன கலபடவின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளது.
திறன் அடிப்படையில் தெரிவு
இதன்போது, நுவரெலியா மாவட்டத்திற்கு உட்பட்ட பிரதேச செயலக பிரிவுகளில் திறன்
அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 4, 900 மாணவர்களில் முதல் கட்டமாக 750
மாணவர்களுக்கான புலமைப்பரிசில் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.