Home இலங்கை சமூகம் வழமைக்கு திரும்பிய தொடருந்து சேவை – வெளியான அறிவிப்பு

வழமைக்கு திரும்பிய தொடருந்து சேவை – வெளியான அறிவிப்பு

0

பாதிக்கப்பட்டிருந்த உடரட்ட மலையக தொடருந்து சேவை மீண்டும் இயல்பு நிலைக்குத்
திரும்பியுள்ளது.

பதுளையிலிருந்து (Badulla) கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற பயணிகள் தொடருந்து தடம் புரண்டதால் பாதிக்கப்பட்டிருந்த தொடருந்து சேவை இன்று காலை 8.30 மணி முதல் வழமைக்கு திரும்பியுள்ளது.

குறித்த விடயத்தை நாவலப்பிட்டி (Nawalapitiya) தொடருந்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதைக்கும் பலத்த சேதம்

நாவலப்பிட்டி பல்லேகம பகுதியில் (09) மாலை 6.00 மணியளவில் தொடருந்து தடம்
புரண்டதால், மலையக தொடருந்து பாதையில் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன.

(09) இரவு கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு சென்ற இரவு அஞ்சல் தொடருந்து சேவை
கம்பளை தொடருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு சென்ற இரவு அஞ்சல் தொடருந்து சேவை
(10) காலை வரை நாவலப்பிட்டி தொடருந்து  நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது என்று
நாவலப்பிட்டி தொடருந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

மேலும், தொடருந்து தடம் புரண்டதால் தொடருந்து பாதைக்கும் பலத்த சேதம் ஏற்பட்டதாக நாவலப்பிட்டி
தொடருந்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version