Home இலங்கை சமூகம் கொழும்பு நிலப் பெறுமதிகளில் பாரிய அதிகரிப்பு: மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

கொழும்பு நிலப் பெறுமதிகளில் பாரிய அதிகரிப்பு: மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

0

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் கொழும்பு மாவட்ட நில பெறுமதிகள் கணிசமாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டின் இதேகாலத்துடன் ஒப்பிடுகையில் நிலப் பெறுமதி குறியீடு (LVI) 11.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

மத்திய வங்கியின் புள்ளிவிவரத் துறை தெரிவித்ததாவது, குடியிருப்பு, வர்த்தக மற்றும் தொழிற்துறை என மூன்று பிரிவுகளும் பெறுமதி அதிகரிப்புக்கு பங்களித்துள்ளன.

நிலப் பெறுமதிகள்

இதில், குடியிருப்பு நிலப் பெறுமதியே அதிகளவில் உயர்ந்துள்ளது. அது 14.4 சதவீத உயர்வைக் காட்டிய நிலையில், வர்த்தக நிலப் பெறுமதி 11.5 சதவீதமும், தொழிற்துறை நிலப் பெறுமதி 8.4 சதவீதமும் அதிகரித்துள்ளன.

மேலும், 2024ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் LVI மற்றும் அதனுடன் தொடர்புடைய பிரிவு குறியீடுகள் வேகமான அளவில் உயர்ந்துள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதில் குடியிருப்பு பிரிவு குறியீடுதான் அதிகளவில் உயர்ந்தது. அதைத் தொடர்ந்து வர்த்தக நிலப் பெறுமதி குறியீடும் அதிகரித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version