Home முக்கியச் செய்திகள் பாதாள குழு தலைவனுக்கு இரகசியமாக பரிமாறப்பட்ட சாவி : அம்பலமான தகவல்

பாதாள குழு தலைவனுக்கு இரகசியமாக பரிமாறப்பட்ட சாவி : அம்பலமான தகவல்

0

கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையில் (colombo magazine prison) தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுவின் தலைவரான மிதிகம ருவன் என்ற நபருக்கு கைவிலங்கு சாவியை இரகசியமாக வழங்க வந்த நபர் ஒருவர் கைrது செய்யப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர், சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பி திசாநாயக்கா தெரிவித்துள்ளார்.

குறித்த கைது நடவடிக்ககையானது நேற்றைய (13.12.2024) தினம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புதிய மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விசேட பிரிவின் சந்தேகநபரான மிதிகம ருவன் என்ற குற்றவாளியைப் பார்ப்பதற்காக நேற்று 12ஆம் திகதி மாலை சுமார் 3.30 மணியளவில் பார்வையாளர்கள் பகுதிக்கு இருவர் வருகைத் தந்திருந்துள்ளனர்.

தந்திரோபாயப் படை 

அவர்களில் ஒருவர் மீது சந்தேகத்தின் அடிப்படையில், சிறைச்சாலை அவசரகால தந்திரோபாயப் படை அதிகாரிகளால் அவர் சோதனைக்குட்படுத்தப்பட்டார்.

அதன்போது, அவரது பணப்பையில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைவிலங்கு சாவி கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், இவருடன் வந்த பெண்ணுக்கு மிதிகம ருவனுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணை

கைது செய்யப்பட்ட நபர் கண்டி நுகவெல பிரதேசத்தைச் சேர்ந்தவர்  எனவும் அவர் தற்பொழுது கொழும்பு கொள்ளுப்பிட்டியில் வசித்து வருவதாகவும் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பொரளை காவல்துறையிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதன் போது  மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையின் போது, ​​தான் சில காலம் காவல்துறை அதிகாரியாக கடமையாற்றியதாக சந்தேகநபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version