கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு உதவத் தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் ருவன் விஜேவர்த்தன இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
அதிகார கைப்பற்றல்
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தைக் கைப்பற்ற ஐக்கிய மக்கள் சக்திக்கு எமது உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுக் கொடுக்கத் தயாராகவே உள்ளோம்.
எனினும், அது தொடர்பில் இதுவரை எதுவித வேண்டுகோளும் விடுக்கப்படவில்லை.
அதே போன்று நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் ஒன்றிணைந்து அதிகாரத்தைக் கைப்பற்றக்கூடிய இடங்களில் அதற்கான ஆதரவை வழங்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராகவே உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
