Home இலங்கை அரசியல் கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐ.தே.க.வுக்கு சிக்கல்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐ.தே.க.வுக்கு சிக்கல்

0

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.

 பெரும் சிக்கல் 

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு கொழும்பு மாநகர சபையில் 13 ஆசனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

குறித்த 13 ஆசனங்களும் பட்டியல் ஆசனங்கள் என்பதன் காரணமாக, அவற்றுக்கு ஆட்களைப் பெயரிடுவதில் அக்கட்சி பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.

இதன் காரணமாக சாகல ரத்நாயக்க தலைமையில் பல்சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ள போதிலும் இதுவரை இறுதி உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை என்று கூறப்படுகின்றது. 

NO COMMENTS

Exit mobile version