Home இலங்கை அரசியல் புலனாய்வுத் துறை தலைவர் நிலந்தவின் பணி நீக்கத்தின் பின் அதிரப்போகும் கொழும்பு

புலனாய்வுத் துறை தலைவர் நிலந்தவின் பணி நீக்கத்தின் பின் அதிரப்போகும் கொழும்பு

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணையில், அந்த தாக்குதல்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மற்றும் அதனை தடுக்க வழி இருந்தும் தடுக்காமல் இருந்தவர்களுக்கே வழங்கப்படவுள்ளது என பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான குண்டுவெடிப்புகளை அறிந்திருந்தும் மறைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அரச புலனாய்வு துறை (SIS) தலைவர் நிலந்த ஜெயவர்தன பொலிஸ் சேவையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நிலந்த ஜயவர்தனவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமென கொழும்பு பேராயர் அலுவலக ஊடகப் பிரதானி ஜூட் கிரிசாந்த அருட்தந்தை வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறான சூழலில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணை என்ற பெயரில் முக்கிய தாக்குதல்தாரிகளை விடுத்து, அதற்கு உடந்தையாக இருந்தவர்களையும், அக்கால கட்டத்தில் பணிபுரிந்த சில அதிகாரிகளையும் விசாரிக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளமை குறித்து கலாநிதி அரூஸ் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கூறியுள்ள கருத்துக்களை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்…,

NO COMMENTS

Exit mobile version