Home முக்கியச் செய்திகள் புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம்: கல்வி அமைச்சின் முன் பாரிய போராட்டம்

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம்: கல்வி அமைச்சின் முன் பாரிய போராட்டம்

0

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்கள் கசிந்த விடயம் தொடர்பில் அமைச்சு எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களின் பெற்றோர்கள் கல்வி அமைச்சுக்கு முன்பாக போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புலமைப்பரிசில் பரீட்சை

2024 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2849 பரீட்சை நிலையங்களில் கடந்த 15 ஆம் திகதி நடைபெற்றது. இதில் 323,879 பரீட்சாத்திகள் கலந்து கொண்டனர்.

இதேவேளை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்படுவதற்கு முன்னர் வினாத்தாளைக் கையடக்க தொலைபேசியில் புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் ஊடாக பகிரப்பட்ட விடயம் பாரிய சர்ச்சையை ஏற்ப்படுத்தி உள்ளது.

இந்நிலையில், புலமைப்பரிசில் பரீட்சை வினா வினாக்களின் முதற்பகுதியின் மூன்று வினாக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு நேற்று (29) மூன்று வினாக்கள் தொடர்பான அனைத்து மாணவர்களுக்கும் முழு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் என அறிவித்தது.

மேலும், மீண்டும் தேர்வு நடத்தப்படாது என்றும், திட்டமிட்டபடி வினாத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி உதவித்தொகை மதிப்பெண்கள் விரைவில் வழங்கப்படும் என்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

@gagana.lk

ශිෂ්‍යත්ව විභාග ගැටළුවට සාධාරණය කෝ? ඉසුරුපාය ඉදිරිපිට උණුසුම් තත්වයක් | #protest #news #gagananews #gaganaexclusive #grade5scholarshipexam #lka #srilanka

♬ original sound – gagana.lk

NO COMMENTS

Exit mobile version