Home இலங்கை பொருளாதாரம் ஏப்ரல் மாதத்தில் அதிகரித்த இலங்கையின் பணவீக்கம்

ஏப்ரல் மாதத்தில் அதிகரித்த இலங்கையின் பணவீக்கம்

0

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் படி இலங்கையின் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் கணிசமான அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில் 2.2 சதவீதமாகக் காணப்பட்ட பணவீக்கம், 2026 ஏப்ரலில் 5.4 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் கடந்த மார்ச் மாதத்தில் 0.7 சதவீதமாக பதிவாகியிருந்த உணவு பணவீக்கமானது ஏப்ரல் மாதத்தில் 2.8 சதவீதமாக அதிரித்துள்ளது.

உணவல்லா பணவீக்கம்

இது தவிர உணவல்லா பணவீக்கமானது கடந்த மார்ச் மாதத்தில் 2.9 சதவீதமாக பதிவாகியிருந்த நிலையில் ஏப்ரல் மாதத்தில் 6.8 சதவீதமாக அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

புத்தாண்டு காலப்பகுதியில் பொருட்களின் கேள்வி அதிகரித்தமை மற்றும் ஏனைய பொருளாதாரக் காரணிகளே இந்த அதிகரிப்புக்குக் காரணமாக அமைந்துள்ளதாகப் பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/colombo-s-inflation-rises-to-5-4-in-april-2026-1777546044

NO COMMENTS

Exit mobile version