Home இலங்கை சமூகம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார்: தம்மிக்க வெளிப்படை

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார்: தம்மிக்க வெளிப்படை

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் என வர்த்தகர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொழில் வல்லுநர்களுக்கான நிலையத்தை
இன்று திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இறுதி தீர்மானம்

மேலும், இது தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுன இறுதி தீர்மானத்தை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் திட்டத்தில் தான் தற்போது செயற்பட்டு வருவதாகவும் தம்மிக்க பெரேரா இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

“நாட்டின் கல்வித் துறையை தான் சரியான திசையில் நகர்த்திச் செல்ல திட்டமிட்டுள்ளேன். அதில் எவ்வித பிரச்சனைகளும் இல்லை. 

நாட்டில் காணப்படும் 10,000 பாடசாலைகளுக்கும் ஒரே விதமான கல்வியை வழங்குவதற்கான அடித்தளத்தை தான் ஏற்கனவே உருவாக்கியுள்ளேன்

ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்குவதன் மூலம் ஒரு வயது முதல் 25 வயது வரையிலானவர்களுக்கான கல்வியை சிறந்த முறையில் வழங்குவதற்கு முடியும். 

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு பொருளாதார திட்டங்கள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதன் பின்னர் தமது பொருளாதாரக் கொள்கைகள் குறித்து வெளிப்படுத்தபடும்.

சில தரப்பினர் இரண்டு ஆண்டுகளாக ஜனாதிபதி தேர்தலுக்கு பிரச்சாரம் செய்து வருகின்றார்கள்.

எனினும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்புவது தொடர்பில் எவரும் சரியான கருத்துக்களை முன் வைக்க தவறி உள்ளனர்.

தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தீர்மானங்களை எடுக்க வேண்டும்” என தம்மிக்க பெரேரா விளக்கமளித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version