Home இலங்கை சமூகம் அரச சொத்து மீதான முறைக்கேடு நடவடிக்கை: எழுந்துள்ள குற்றச்சாட்டு

அரச சொத்து மீதான முறைக்கேடு நடவடிக்கை: எழுந்துள்ள குற்றச்சாட்டு

0

Courtesy: H A Roshan

ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக இணைப்பாளர் பதவியை பெறுபவர்களுக்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கு சொந்தமான வாகனங்களை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை அரச சொத்து மீதான முறைக்கேடு என தேர்தல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மகீன் இந்த முறைபாட்டினை மேற்கொண்டுள்ளார்.

மேலும் குறித்த முறைபாட்டில், 

“கிழக்கு, மத்திய தென் மாகாண ஆளுநர்கள் மூலமாக உள்ளூராட்சி மன்றங்களில் கடமையாற்றிய முன்னாள் நகர முதல்வர்கள் மற்றும் தவிசாளர்களுக்கு ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக இணைப்பாளர்கள் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

 

தேர்தல் ஆணைக்குழு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வேட்பு மனு தாக்கல் செய்து தேர்தல் தினம் குறிப்பிடப்படாமல் வரையறை இன்றி ஒத்திவைக்கப்பட்டு இருக்கக்கூடிய சந்தர்ப்பத்தில் இவ்வாறான நியமனங்கள் வழங்கப்படுகின்றன. 

அதேபோன்று, அதன் ஊடாக அரச சொத்துக்கள் பயன்படுத்தப்படுவது தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறுகின்ற செயற்பாடாகும். 

இதேநேரம், உள்ளூராட்சி மன்றங்களுக்கு சொந்தமான வாகனங்கள் உள்ளூராட்சி மன்ற செயலாளர் வசமே காணப்படுவதனால் இவ்வாறு அரச சொத்துக்களை முறைகேடாக பயன்டுத்த துணை போகக்கூடிய அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version