Home இலங்கை பொருளாதாரம் தேர்தலையொட்டி கொழும்பு பங்குச் சந்தை நேரத்தில் மாற்றம்

தேர்தலையொட்டி கொழும்பு பங்குச் சந்தை நேரத்தில் மாற்றம்

0

2024ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்திற் கொண்டு கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) வர்த்தக நேரத்தில் மாற்றத்தினை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படவிருக்கும் நவம்பர் 14ஆம் திகதி அன்று சந்தையை குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் மூட கொழும்பு பங்குச் சந்தை தீர்மானம் செய்துள்ளது.

மீள திறத்தல் 

அதன்படி, தேர்தல் நடைபெறும் தினத்தன்று காலை 09.30 மணி முதல் மதியம் 12.30 மணிவரை வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெறும். 

அதேவேளை, வழக்கமான நேரத்திற்கமைவான வர்த்தக நடவடிக்கைகள், எதிர்வரும் 18ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கொழும்பு பங்குச் சந்தை அறிவுறுத்தியுள்ளது. 

Source: https://tamilwin.com/article/colombo-stock-exchange-will-be-closed-on-election-1731326138

NO COMMENTS

Exit mobile version