Home இலங்கை பொருளாதாரம் எரிபொருளுக்கான வரி தொடர்பில் வெளியான தகவல்

எரிபொருளுக்கான வரி தொடர்பில் வெளியான தகவல்

0

எதிர்காலத்தில் எரிபொருளுக்கான வரி குறைக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய(18) அமர்வின் போது  நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் உரையாற்றிய அமைச்சர், உரிய முறையில் வரிக்குறைப்பை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போது வழங்கப்படக்கூடிய அனைத்து சலுகைகளையும் வழங்கியுள்ளதாகவும் புதிதாக எந்தவொரு வரியும் விதிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.youtube.com/embed/yGo1AA9tbmQ

NO COMMENTS

Exit mobile version