Home இலங்கை சமூகம் மலையக தொடருந்து சேவையில் மாற்றம்

மலையக தொடருந்து சேவையில் மாற்றம்

0

கொழும்பு மற்றும் கண்டியில் இருந்து ஒன்பது வளைவுகள் பாலத்தினூடாக, வரும் மலையக தொடருந்து சேவைகள் இன்றிலிருந்து (09) எதிர்வரும் 15 ஆம் திகதி வரை எல்ல அல்லது பண்டாரவளையில் நிறுத்தப்படும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த தீர்மானம் திரைப்படத்துக்கான படப்பிடிப்பு நடவடிகைகளுக்காக எடுக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடருந்து சேவை

அத்துடன், காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நாளாந்த தொடருந்து சேவை பதுளை வரை பயணிக்காது என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதேபோன்று, எதிர் திசையில் செல்லும் தொடருந்துகள் குறித்த காலப்பகுதியில் பதுளைக்குப் பதிலாக எல்ல அல்லது பண்டாரவளையில் இருந்து புறப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

Source: https://ibctamil.com/article/colombo-to-kandy-trainservice-1728423644

NO COMMENTS

Exit mobile version