Home சினிமா 6 மாத உழைப்பில் சிக்ஸ் பேக், ஆனால் 59 வினாடி தான்.. நடிகர் சூரி வருத்தம்

6 மாத உழைப்பில் சிக்ஸ் பேக், ஆனால் 59 வினாடி தான்.. நடிகர் சூரி வருத்தம்

0

 சூரி

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனது பயணத்தைத் துவங்கி, தற்போது மாஸ் கதாநாயகனாக மாறி வலம் வருகிறார் நடிகர் சூரி.

தற்போது, சூரி பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் மே 16-ம் தேதி வெளியாகிறது.

படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில், இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது கலந்து கொண்டு சூரி பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அஜித் தான் பெண்களை மரியாதையுடன் நடத்துபவர், அப்போ விஜய்.. திவ்யா சத்யராஜ் பரபரப்பு பதிவு

சூரி வருத்தம் 

அதில், ” சீம ராஜா படத்திற்காக இயக்குநர் பொன்ராம் என்னை சிக்ஸ் பேக் வைத்துக்கொள்ள சொன்னார். இதற்காக ஆறு மாத காலம் கடினமாக உழைத்தேன், என் மனைவியும் எனக்கு உதவி செய்தார்.

படம் வெளியான பின் திரையரங்கத்தில் பார்ப்பதற்காக ஆவலுடன் குடும்பத்துடன் சென்றேன். ஆனால் அந்த சிக்ஸ் பேக் திரையில் வெறும் 59 வினாடிகள் தான் இடம்பெற்றது.

அதை கண்டு சற்று கவலை கொண்டேன். ஆனால், அதுதான் என்னை இந்த அளவிற்கு உயர்வதற்கான நம்பிக்கையை விதைத்தது” என்று கூறியுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version