Home இலங்கை சமூகம் இந்திய இராணுவத்தினரால் படுகொலை – யாழ். போதனா வைத்தியசாலையில் 37ஆவது நினைவேந்தல்

இந்திய இராணுவத்தினரால் படுகொலை – யாழ். போதனா வைத்தியசாலையில் 37ஆவது நினைவேந்தல்

0

யாழ். போதனா வைத்தியசாலையில் (Jaffna Teaching hospital) இந்திய இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களது 37ஆவது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியசாலை பணியாளர்கள் 21 பேர் உள்ளிட்ட 68 பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டதுடன் பலரும் காயமடைந்தனர்.

37ஆவது நினைவு தினம்  

இந்நிலையில், சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் 37ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்றையதினம் (21.10.2024) நினைவு கூறப்பட்டுள்ளது.

இதன்போது, பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டு நினைவுச் சுடர் ஏற்றப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் ஆகியோர் நினைவேந்தலில் கலந்து கொண்டுள்ளனர்.

மேலதிக தகவல் – கஜி

Source: https://ibctamil.com/article/commemoration-killed-jaffna-teach-hos-indian-army-1729486005

NO COMMENTS

Exit mobile version