விவசாயிகள் வழங்கிய ஒத்துழைப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மறக்கவில்லை. அதனாலேயே அடுத்த வருடத்திலிருந்து 25 ஆயிரம் ரூபாய் உர நிவாரணம் வழங்கத் தீர்மானித்துள்ளார் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
வவுனியா, மதவாச்சியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடியும் ரணிலும்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டில் நெருக்கடி வருகின்ற வேளையில் தப்பியோடுவதைப் போன்று நாட்டு மக்களின் கஷ்டங்களிலிருந்து விடுவிப்பது இலகுவானதல்ல.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப விவசாயிகள் வழங்கிய ஒத்துழைப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மறக்கவில்லை. அதனாலேயே அடுத்த வருடத்திலிருந்து 25 ஆயிரம் ரூபாய் உர நிவாரணம் வழங்கத் தீர்மானித்துள்ளார்.
அநுரகுமார திசாநாயக்க போன்றவர்கள் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையில் வன்மத்தை உக்கிரப்படுத்தி நாட்டு மக்களை தொடர்ந்தும் வறுமையில் வாழச் செய்ய முயற்சிக்கிறார்கள்.
ஆனால் ஜேவீபிக்கு அதிகாரம் வழங்க இந்த நாட்டு மக்கள் சிறிதும் விருப்பமில்லை என்பதை நாம் அறிவோம்.
அதேபோல் நாட்டு மக்கள் இருளுக்குள் வாழ்ந்தபோது அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு அரசியல் இலாபம் தேடியவர்கள் ஜேவீபியினர் என்பதையும், உமா ஓயா போன்ற திட்டங்களை காலம் தாழ்த்தி நாட்டுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தித் தந்தவர்கள் ஜேவீபியினர் என்பதையும் மக்கள் மறந்துவிடக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.