Home இலங்கை சமூகம் யாழ். போதனா வைத்தியசாலை படுகொலை : தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அஞ்சலி

யாழ். போதனா வைத்தியசாலை படுகொலை : தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அஞ்சலி

0

யாழ். போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) இந்திய இராணுவத்தினரால் (Indian Army) படுகொலை செய்யப்பட்ட உறவுகளது 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் (TNPF) ஏற்பாட்டில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இன்றையதினம் (21) அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது உயிர்நீத்தவர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அஞ்சலி நிகழ்வு 

இந்த அஞ்சலி நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட மருத்துவர்கள், தாதியர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் உறவுகள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கலந்துகொண்டனர்.

இதேவேளை இந்திய இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவு தினம் யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினராலும் இன்று காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

1987 ஆம் ஆண்டு யாழ் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து இந்திய இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் அங்கு  கடமையாற்றிய பணியாளர்கள் 21 பேர் உள்ளிட்ட 68 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் பலர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version