Home இலங்கை சமூகம் குடாவெல்ல கடற்றொழில் துறைமுகத்தில் தீ விபத்து

குடாவெல்ல கடற்றொழில் துறைமுகத்தில் தீ விபத்து

0

குடாவெல்ல கடற்றொழில் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில் ஏற்பட்ட தீ விபத்தில், அருகில் இருந்த 3 கடற்றொழில் படகுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தீ விபத்து சம்பவம் இன்று (21) காலை இடம்பெற்றுள்ளது.

‘துஷானி’ என்ற படகிலே தீ பரவியதாகவும், தீயினால் படகு முற்றாக எரிந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எரிவாயு கசிவு

இந்த தீயினால் படகுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீண்டநாள் கடற்றொழில் படகு உள்ளிட்ட சிறிய படகொன்றும் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில், தீ விபத்தானது எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/fire-at-kudawella-fisheries-harbour-1729500915

NO COMMENTS

Exit mobile version