புதிய இணைப்பு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னாலுள்ள கடையில் ஏற்பட்ட தீயானது பல போராட்டத்தின் மத்தியில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைப்பு படை மற்றும் காவல்துறையின் தீயணைப்பு
பிரிவினர், காத்தான்குடி நகரசபை தீயணைப்பு படை இணைந்து நள்ளிரவு 12.30
மணிக்கு பல போராட்டத்தின் மத்தியில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தாக தெரிவிக்கப்படுகிறது.
இருந்த போதும் கடைதொகுதி முற்றாக எரிந்து சாம்பலாகி உள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளை சம்பவ இடத்துக்கு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், பிரதி
முதல்வர் வைரமுத்து தினேஷ்குமார், மாநகர சபை உறுப்பினர்களான மதன்,பிரதி,
ஜனகன், தரண் ஆகியோர் வருகை தந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இது தொடர்பான விசாரணைகளை மட்டு தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
முதலாம் இணைப்பு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னாலுள்ள கடையில் இன்றிரவு பற்றிய தீயினால் அந்த கடை பற்றி எரிவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு நகரமே இரவு நேரம் பெரும் புகை மண்டலமாக காட்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னாலுள்ள ஹோட்டல் ஒன்றே தீப்பற்றி எரிகிறது
மின்சாரத்தில் ஏற்பட்ட ஒழுக்கு
மின்சாரத்தில் ஏற்பட்ட ஒழுக்கு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த ஹோட்டல் இரவு வியாபாரத்திற்கு பின்னர் பூட்டப்பட்ட நிலையில் அங்கு வேலை செய்த 07 பேர் அதற்குள் உறங்கிக் கொண்டிருந்தனர். இந்த தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து ஹோட்டலின் கதவு உடைக்கப்பட்டு
அவர்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
தற்போது மட்டக்களப்பு மாநகரசபை மற்றும் காவல்துறையின் 04 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
காணொளி – https://www.facebook.com/watch/?v=1745143989526785
