பதவி இடைநிறுத்தப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை (Deshabandu Tennakoon) பதவி நீக்கம் செய்வதற்கான விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதி ப்ரீதி பத்மன் சூரசேன குறித்த விசாரணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இணக்கப்பாட்டின் அடிப்படையில்
அவருக்கு மேலதிகமாக நீதியரசர் நீல் இத்தவெல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் லலித் ஏக்கநாயக்க ஆகியோர் ஏனைய அங்கத்தவர்களாக நியமனம் பெற்றுள்ளனர்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
