Home இலங்கை அரசியல் ஜனாதிபதி தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணைக்குழு விசேட அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணைக்குழு விசேட அறிவிப்பு

0

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் இரண்டாவது விருப்புவாக்கை எண்ணுவதற்கு தயாராகுமாறு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் நிலையங்களில் ஜனாதிபதித் தேர்தலின் வாக்குகளை எண்ணுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதல் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு, எந்த வேட்பாளரும் 50 சதவீத வாக்குகளைப் பெறாவிட்டால், இரண்டாவது விருப்பத்தேர்வை எண்ண வேண்டும்.

வாக்கு எண்ணும் நடவடிக்கை

எனவே அதற்குத் தயாராக இருக்குமாறு அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனால், ஒவ்வொரு வாக்கு எண்ணும் நிலையத்துக்கும் அனுப்பப்படும் வாக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, இரண்டாவது விருப்பத்தேர்வை எண்ணுவதற்கு, நான்கு அல்லது ஐந்து அதற்கு மேற்பட்ட அலுவலர்களை தயார் நிலையில் வைத்திருக்க, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

இதன்படி ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பாலான வாக்காளர்கள் விருப்புரிமையைக் குறிக்கும் நிகழ்தகவு மிகக் குறைவு என்றும், ஒரு வேட்பாளருக்கு மட்டும் வாக்களிப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version