Home இலங்கை அரசியல் சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல் களம்: வேட்பாளர்களுக்கு ஆணைக்குழு எச்சரிக்கை

சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல் களம்: வேட்பாளர்களுக்கு ஆணைக்குழு எச்சரிக்கை

0

ஜனாதிபதி தேர்தலின் வாக்கெடுப்பு நிறைவடைந்து 21 நாட்களுக்குள் தேர்தல் பிரசார செலவினங்கள் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை சமர்ப்பிக்காத வேட்பாளர்களின் குடியுரிமை 3 ஆண்டுகளுக்கு இரத்து செய்யப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட மொஹமட் இல்யாஸ் மரணமடைந்தாலும் அவரின் பெயரை வாக்குச் சீட்டில் இருந்து நீக்கமுடியாதென தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களின் பெயர்களும் வாக்குச் சீட்டில்
அச்சிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறியுள்ளார்.

மொஹமட் இல்யாஸ் 

இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட மொஹமட் இல்யாஸ் நேற்றையதினம் திடீரென மாரடைப்பால் மரணமடைந்ததன் காரணமாக அவரின் பெயரை வாக்கு சீட்டில் இருந்து நீக்கமுடியாதென ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

எனவே ஜனாதிபதி வேட்பாளர் மொஹமட் இல்யாஸின் பெயர் வாக்குச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அவருக்குப் பதிலாக மாற்று நபரை முன்வைக்க பிரதிநிதிகள் விண்ணப்பித்தால் அதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்போது, 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களின் பெயர்களை நீக்கவோ அல்லது மாற்றவோ முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version