Home இலங்கை அரசியல் படலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் வெளியான புதிய தகவல்

படலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் வெளியான புதிய தகவல்

0

படலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆய்வு செய்வதற்காக நான்கு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த நியமனமானது, சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரால் நியமிக்கப்பட்ட தொடர்புடைய குழுவிற்கு சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ரோஹந்த அபேசூரிய தலைமை தாங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

குழுவின் மற்ற உறுப்பினர்கள் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஜெயனி வேகடபொல மற்றும் அரச சட்டத்தரணி சக்தி ஜகோடஆரச்சி ஆகியோர் ஆவர்.

குற்றப்பத்திரிகை தாக்கல்

இதன்படி, படலந்த ஆணைக்குழு அறிக்கையில் கிடைக்கும் ஆதாரங்களிலிருந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியுமா என்பது குறித்து இந்த குழு ஆராயவுள்ளது.

அத்துடன், ஏதேனும் காலக்கெடுவுக்கு உட்பட்ட பிழைகளை அடையாளம் காண்பதும் குழுவின் பொறுப்பாக கருதப்படுகிறது.

மேலும் விசாரணை தேவைப்படும் எந்தவொரு விஷயங்களையும் அடையாளம் காணவும் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் முடிவு

படலந்த ஆணைக்குழு அறிக்கை சமீபத்தில் ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் ஜனாதிபதி செயலகத்தால் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், படலந்த அறிக்கை குறித்து மேலும் நடவடிக்கை எடுக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version