இலங்கையில் (sri lanka)நாளுக்கு நாள் அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களைத் தடுப்பதற்காக, பதில் காவல்துறை மா அதிபர் தலைமையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புக் குழு ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
இந்த குழுவின் தலைவர்களாக மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர்கள் செயற்படுவார்கள்.
காவல்துறை உயர்மட்ட தளபதிகள்
மேலும், அரச புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவரும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளார்.
20 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட இந்தக் குழுவில் காவல்துறை விசேட அதிரடிப் படைத் தளபதி, விசேட காவல்துறை பிரிவிற்குப் பொறுப்பான டி.ஐ.ஜி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான டி.ஐ.ஜி மற்றும் 10 டி.ஐ.ஜி.க்கள் இடம்பெற்றுள்ளனர்.
அத்துடன், குற்றப் புலனாய்வுப் பகுப்பாய்வு மற்றும் தடுப்புப் பிரிவு, கொழும்பு குற்றப் பிரிவு, மேல் மாகாண வடக்கு மற்றும் தெற்கு குற்றப்பிரிவு மற்றும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை குற்றப் பிரிவுகளின் பணிப்பாளர்களும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.