இடைநிறுத்தப்பட்ட காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவை நியமிக்கும் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த பிரேரணையானது, இன்று (08) நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த பிரேரணையை தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர சமர்ப்பித்தார்.
முன்மொழிவு
அதன்படி, நாடாளுமன்றில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்த பிரேரணை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்றத்தில் தனது கருத்துக்களை வெளிப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமச்சந்திர, தவறான நடத்தை மற்றும் கடுமையான பதவி துஷ்பிரயோகத்திற்காக அவரை பதவியில் இருந்து நீக்க ஒரு விசாரணைக் குழு நியமிக்கப்பட வேண்டும் என்று முன்மொழிதுள்ளார்.
