Home இலங்கை சமூகம் தடைப்பட்டுள்ள தொலைத்தொடர்பு சேவைகளை விரைவாக வழங்க நடவடிக்கை

தடைப்பட்டுள்ள தொலைத்தொடர்பு சேவைகளை விரைவாக வழங்க நடவடிக்கை

0

சீரற்ற காலநிலை காரணமாக தடைப்பட்டுள்ள தொலைத்தொடர்பு சேவைகளை மீள வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக டிஜிட்டல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடுகண்ணாவ மற்றும் வத்தளை உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய ஃபைபர் கட்டமைப்பு சேதம் அடைந்துள்ளமையால் நாட்டின் பல பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தொடரும் அடைமழை மற்றும் மின்சார தடை காரணமாக கட்டமைப்பில் ஏற்பட்ட சேதங்களை சீர்செய்ய முடியவில்லை.

தொலைத்தொடர்பு சேவைகள் பாதிப்பு

இதன் காரணமாக பலர் தொலைபேசி மற்றும் இணையத்தை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் நெருக்கடிகளுக்கு மத்தியலும் அதனை சீர்செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அவசரமான பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் முதற்கட்டமாக திருத்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைய விரைவில் நாடு முழுவதும் தொலைத்தொடர்பு சேவைகள் வழமைக்கு திரும்பும் எனவும் அதுவரை பொது மக்கள் அமைதி காக்க வேண்டும் எனவும் அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version