Home இலங்கை சமூகம் உப்பு விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

உப்பு விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

0

சமையல் உப்பின் விலையைக் குறைக்க உப்பு உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இலங்கையில் நிலவிய கடும் உப்பு தட்டுப்பாடு தற்போதைக்கு ஓரளவுக்கு தீர்ந்துள்ளதுடன், போதுமான அளவில் உப்பு கையிருப்பில் உள்ளதாகவும், உற்பத்தி நடவடிக்கைகளும் சீராக மேற்கொள்ளப்படுவதாகவும் உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உப்பின் விலை

அதன் பிரகாரம் இனிவரும் காலங்களில் கட்டி உப்பு ஒரு கிலோ 180 ரூபா, தூள் உப்பு ஒரு கிலோ 240 ரூபா, தூள் உப்பு 400 கிராம் 120 ரூபா என்று விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போதைக்கு சந்தையில் கையிருப்பில் உள்ள உப்பு விற்பனை செய்யப்பட்ட பின்னரே குறைக்கப்பட்ட விலையில் உப்பு சந்தைக்கு வரும் என்றும் உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் சந்தைப்படுத்துவோர் அறிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version