Home இலங்கை சமூகம் மனிதர்களுக்கு ஏற்படப்போகும் கொடிய ஆபத்து.. உலகை பீதியில் ஆழ்த்தியுள்ள பாபா வங்காவின் கணிப்பு

மனிதர்களுக்கு ஏற்படப்போகும் கொடிய ஆபத்து.. உலகை பீதியில் ஆழ்த்தியுள்ள பாபா வங்காவின் கணிப்பு

0

2088ஆம் ஆண்டில், பூமியில் ஒரு அறியப்படாத வைரஸ் பரவும் எனவும் அந்த வைரஸ் காரணமாக மனிதர்கள் விரைவாக வயதானவர்களான தோற்றத்திற்கு மாறி விடுவார்கள் எனவும் பாபா வங்கா கணித்துள்ளார். 

ஜப்பானின் பாபா வங்கா என்று அழைக்கப்படும் ரையோ தத்சுகி என்ற பெண், மிக விசித்திரமான முறையில், துல்லியமாக உலகில் நிகழவிருக்கும் அபாயங்கள் குறித்து முன்னமே கணித்துள்ளார், அவை நிறைவேறியும் இருக்கின்றன. 

விரைவில் முதுமை.. 

இந்நிலையில், தற்போது அவர் கணித்திருந்த ஒரு வைரஸ் நோய்த்தாக்கம் பற்றிய கணிப்பு சமூக ஊடகங்களில் மிக பரவலாக பகிரப்பட்டு வருகின்றது. 

அடுத்த 6 தசாப்தங்களுக்குப் பிறகு ஏற்படக் கூடிய இந்த வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் வயதானவர்கள் போன்ற தோற்றத்தை பெறுவர்கள் என பாபா வங்காவின் கணிப்பு தெரிவிக்கின்றது. 

இந்நிலையில், இந்த வைரஸ் பற்றிய பாபா வங்காவின் கணிப்பு உண்மையாகலாம், ஆனால் இன்றைய மாறிவரும் காலநிலை, உயிரியல் போர் மற்றும் ஆய்வகங்களில் வைரஸ்கள் உருவாக்கப்படும் சூழலில் இது மிகவும் கவலைக்குரிய விடயமாக மாறக்கூடும் என பலர் அச்சம் தெரிவித்து வருகின்றனர். 

பாபா வங்காவின் முழுப் பெயர் வான்ஜெலியா பாண்டேவா டிமிட்ரோவா என்பதாகும், அவர் 1911இல் பிறந்துள்ளார். 

அவர் மேற்குலகின் பால்கன் நோஸ்ட்ராடாமஸ் என்றும் கருதப்படுகிறார். பாபா வங்கா குழந்தை பருவத்தில் ஒரு விபத்தில் தனது பார்வையை இழந்ததாகவும், அதன் பிறகு எதிர்காலத்தைப் பார்க்கும் திறனைப் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

பாபா வங்காவின் பல கணிப்புகள் பெருமளவில் உண்மையாகியுள்ளதாகவும் அவரின் கணிப்புகளில் 9/11 தாக்குதல், குர்ஸ்க் நீர்மூழ்கிக் கப்பல் விபத்து, பராக் ஒபாமா ஜனாதிபதியானமை மற்றும் இந்திரா காந்தியின் படுகொலை ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version