Home இலங்கை அரசியல் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை! அடுத்த எம்.பி கௌசல்யா..

அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை! அடுத்த எம்.பி கௌசல்யா..

0

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் பதவி பறிக்கப்பட்டால் அடுத்ததாக அந்தப் பதவிக்கு சட்டத்தரணி கௌசல்யா  நரேந்திரன்  தெரிவாகுவார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் எம்.பி பதவியை இடைநிறுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. 

அடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் கௌசல்யா..

இந்த நிலையில், நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அர்ச்சுனா எம்.பி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

மேலும், தனக்கு அடுத்ததாக அதிகப்படியான வாக்குகளை எடுத்தது சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரன் என்றும், தனது பதவி இல்லாமலாக்கப்பட்டால்  அந்த இடத்திற்கு கௌசல்யா தெரிவாகுவார் என்று அர்ச்சுனா எம்.பி தெரிவித்துள்ளார்.

தான்  நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் கௌசல்யா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் இரண்டும் ஒன்றுதான் என்று அர்ச்சுனா எம்.பி சுட்டிக்காட்டினார்.

NO COMMENTS

Exit mobile version