Home இலங்கை சமூகம் வவுனியாவில் நெற் காணிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை

வவுனியாவில் நெற் காணிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை

0

வவுனியாவில்(Vavuniya) அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளப் பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன.

அந்தவகையில் கமநல அபிவிருத்தி நிலையங்களின் கீழ் செய்கை மேற்கொள்ளப்பட்ட 3529.25
ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதாக விவசாயிகளால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இழப்பீடு வழங்க நடவடிக்கை

இந்நிலையில் அழிவடைந்த நெற்காணிகள் தொடர்பாக கமத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள
காப்புறுதிச் சபையின் உத்தியோகத்தர்களால் மதீப்பீடு செய்யும் பணிகள் அண்மைய
நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்தன.

மதிப்பீட்டின் அடிப்படையில்1387.5 ஏக்கர் நெற்காணிகளுக்கு இழப்பீடு
வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு ஏக்கருக்கும் தலா 14,400 ரூபாய் வீதம் இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version